பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி?


நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் தாக்கும் பெரிய நோய்களை குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல முக்கியமான கொடிய நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறியவே முடியாது.

மாறாக முற்றிய நிலையில் தான் அந்த நோய்களைக் கண்டறிய முடியும். சில நோய்களுக்கான அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் உடல்நலக் குறைவாக இருப்பதால், பலர் அதனை சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் பித்தப்பை கற்கள்.

பித்தப்பையில் உருவாகும் கற்கள், வலியை ஏற்படுத்தும் வரை, அது நமக்கு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். பித்தப்பை கற்களுக்கான இயற்கை வைத்தியத்தைக் குறித்து காணும் முன்பு, அது எதனால் வருகிறது என்பதைக் காண்போம்.

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகுபவை. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும்.

எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன.

இருப்பினும் பித்தக்கற்கள் பித்த உப்புக்களாலும் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகின்றன.

சரி, இப்போது பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

* 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்.

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும்.

இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

நன்றி-doctor.lkLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *