சுவையான பூண்டு சிக்கன் ரைஸ் செய்யலாமா?


பூண்டினை சாப்பிட குழந்தைகள் மறுக்கிறார்களா இல்லையேல் சாப்பாட்டில் உள்ள பூண்டினை வெளியே தூக்கி எறிந்து விடுகிறார்களா? இனி கவலையே வேண்டாம். பூண்டினை விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ரெசிப்பியினை நாம் செய்து கொடுத்து அசத்தலாம்.

இப்போது சுவையான பூண்டு சிக்கன் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

INGREDIENTS

 • வெங்காயம் – ¼ கப்
 • மிளகு – ½ கப்
 • பூண்டு பற்கள் – 4
 • அரிசி – ½ கப்
 • வெஜிடபிள் ஆயில் – 2 டீஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – ¼ கப்
 • கோழிக் கறி எலும்பு இல்லாதது- 250 கிராம்
 • இஞ்சி – 1
 • சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
 • தேன் – 1 டீ ஸ்பூன்
 • கோழி குழம்பு – ½ கப்
 • கொத்துமல்லி – 1
 • உப்பு – தேவையான அளவு

INSTRUCTIONS

 1. வெங்காயம் மற்றும் கொத்துமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
 2. அடுத்து ஒரு கிண்ணத்தில் சிக்கன், வெங்காயம், பூண்டு, இஞ்சி, எண்ணெய், உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
 3. இதனை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
 4. அடுத்து குக்கரில் அரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.
 5. அடுத்து சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 6. அடுத்து மிளகையும், சோயா சாஸையும் சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும்.
 7. அடுத்து, கோழி குழம்பை அத்துடன் சேர்த்து, மூடி வைக்க வேண்டும்.
 8. 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, தேன் மற்றும் நறுக்கப்பட்ட கொத்துமல்லியையும் சேர்த்துகொள்ளவும்.
 9. சுவையான பூண்டு சிக்கன் ரைஸ் ரெடி!!

நன்றி : தமிழ்-ருவின்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *