காயத்ரி மந்திரத்தின் வரலாறு!


முன்னொரு காலத்தில் சத்ரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி கௌசிக மன்னன் இரவல் கேட்கிறார்.

இருப்பினும் வசிஷ்டர் அதனை மறுத்துவிடவே, கோபமுற்ற கௌசிக மன்னன் வசிஷ்டர் மீது போர் தொடுத்து அதில் தோல்வியும் அடைகிறார்.

இதனையடுத்து பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் என்றும், எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்றும் எடுத்துக்கூறினார்.

இருப்பினும் ஒரு சத்திரியனால் பிரமரிஷி பட்டத்தை இலகுவாக பெறமுடியாது என்ற விடயத்தையும் சுட்டிக்காடினார்.

வசிஷ்டரின் கருத்துக்களை செவிமெடுத்த கௌசிக மன்னன் தன் நாட்டு மக்களுக்காக அந்த பிரம்மரிஷி பட்டத்தை பெற்றுக்காட்டுவேன் என சவால் விடுத்து, ஒரு கள்ளி செடியின் முனையின் மேல் நின்று கடும் தவம் புரிகிறார்.

இதனை கண்ட அன்னை சக்தி கௌசிக மன்னின் முன் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என கூறி மறைகிறாள்.

சக்தியின் வாக்கினையடுத்து நான்கு வேதங்களின் பிறந்தநாள், அன்று சக்தி தேவியின் ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார்.

ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன், தலை, இரண்டு கை மற்றும் கால்களையும் வைத்து அந்த விளக்கை ஏற்ற முனைகிறார்.

தனது உடலையே திரியாக்கி விளக்கேற்றியதைக் கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார்.

தனது உடலையே திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கௌசிக மன்னன் தான் அறிந்த நான்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி கூறியதனால் இந்த மந்திரம் காயத்திரி மந்திரம் என அழைக்கப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *