மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா?


நம்முடைய வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். அதில் நிறைய நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும். சில நம்மை அருவருப்பு அடையச் செய்திருக்கும்.

குறிப்பாக பன்றியை நினைத்தாலே நிறைய பேர் அருவருப்பாவது உண்டு. ஆனால் அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா?

பன்றியால் நேராக அன்னாந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இதுபோன்று மனிதன் இறப்பதற்கு காரணமான சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.

மின்னல்

உலகில் மினன்ல் தாக்குவதால் அதிக அளவில் உயிர் இழப்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் தானாம்.

கொசு

உலகில் அதிக மனிதர்கள் இறந்து போவதற்குக் காரணமான விலங்கு எது தெரியுமா? அதிர்ச்சியிலேயே செத்திடாதீங்க. அது வேற எதுவும் இல்ல. கொசு தான்.

காபி

தொடர்ந்து 42 கப் காபி குடித்தால் உடனடியாக அந்த நபர் இறந்து போய்விடுவாராம். காபி பிரியர்கள் இதை கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கிட்டா நல்லது.

எலி

எலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபது வகைக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலரும் எலியைக் காணும்போது அதனை பழி வாங்கும் நோக்கத்துடன் அதனை கொல்ல முயற்சிக்கின்றனர்.

எலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.

 

நன்றி : நெற்றிக்கண்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *