வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்? யார் இருக்கக்கூடாது?


இந்த உலகத்தைக் காக்கின்ற தெய்வங்களில் ஒன்றாக, மகாலட்சுமி கருதப்படுகிறார். நாம் மனதுக்குள் நமக்குத் தேவையானதை வேண்டுகின்ற போது, அதை நமக்குக் கொடுக்கின்ற வரலட்சுமியாக இருப்பதால் தான் இந்த வரதத்துக்குக் வரலட்சுமி நோன்பு என்று பெயர் ஏற்பட்டது.

நம்முடைய வீடுகளில் இறைவனின் அருள்மழையும் தானாய் லட்சுமிதேவி தேடி வந்து குடியேறும் நல்ல நாள் தான் வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் விரதம்
பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் தான் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றொரு ஐதீகம் இருக்கிறது. இந்த விரதத்தின் மூலம் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுண்டு.

யார் இருக்கலாம்?

பெண்கள் தங்களுக்கு மாங்கல்யம் நீண்டு இருக்க வேண்டும். கணவன் முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து விரதம் இருப்பார்கள். அதேபோல். திருமண தோஷங்கள் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இந்த விரதம் இருப்பார்கள்.

என்ன கிடைக்கும்?

வரலட்சுமி விரதம் மேற்கொள்வதால், நம்முடைய வீட்டில் செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற அத்தனை செல்வங்களும் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

வேலையிலோ அல்லது குடும்ப விவகாரத்திலோ மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு மனக்கஷ்டத்தைக் குறைத்து, அதற்கு சிறந்த மருந்தாக மன அமைதி கிடைக்கும்.

விரதம் இருக்கும் நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதத்தில் வருகின்ற பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற செவ்வாய்க் கிழைமதான் வரலட்சுமி விரதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இதை “ஸ்ராவண பூர்வஸ்த்த சுக்ர வாரே” என்பது தான்இந்த பாடல். இதில் வருகிற ஸ்ராவண என்பது ஆவணி மாதத்தைக் குறிப்பதாகும். அந்த ஆவணி பௌர்ணமிக்கு முன் வருகின்ற வெள்ளிக்கழமைக்கு உரியவள் தான் லட்சுமி தேவி.

விரதத்துக்கு தயார் செய்ய வேண்டியவை

வீட்டில் உள்ள பூஜையறையை நன்கு சுத்தம் செய்து, கடவுளுடைய படங்களை நன்கு துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும். பஞ்சபாத்திர உத்தரிணி, தூபக்கால், தீபக்கால், பஞ்சமுக ஆரத்தி போன்றவற்றை சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைமரம்

பூஜை செய்கின்ற இடத்தில் மந்தஹாஸம் என்று சொல்லப்படுகிற, சின்ன கழிகள் (குச்சிகள்) வைத்து சிறயதாகப் பந்தல் போட்டு அதன்மேல் பட்டுத்துணியை பந்தல்போல போட வேண்டும். பின்அந்த இடத்தில் வாழைமரத்தைக் கட்ட வேண்டும். அதேபோல் மாமரம் கட்டி பந்தல் போடப்பட்டிருக்கின்ற இடத்தில் மாக்கோலம் போட்டு, அதில் காவி அடிக்க வேண்டும்.

அதேபோல அம்மனை அழைக்கப் போடப்பட்டிருக்கும் சின்ன பலகையிலும் சிறிய கோலம் போட்டுக் கொள்ள வேண்டும்.

கலசம் தயாரித்தல்

கலசச் செம்பு எடுத்துக் கொண்டு, அதில் கலசப் பொருள்களைச் சேர்க்க வேண்டும். நீர்க்கலசமாக தயாரித்தால் அதில் தண்ணீர் சேர்த்து வாசனைத் திரவியங்களான பச்சைக் கற்பூரம், எலுமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும்.

அரிசிக் கலசமாக இருந்தால் அதில் அரிசியுடன் வெற்றிலையைச் சேர்க்க வேண்டும்.

இப்படி கலசம் தயாரிக்கப்பட்ட பின், செம்பின் மேல் மா இலைகளை வைத்து, சுத்தம் செய்மு மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன்மேல் கலசத்திற்கு பட்டுத்துணியால் ஆன பாவாடையைக் கட்ட வேண்டும்.

இதன் பின் அம்மன் படத்தை வைத்து பூஜை செய்து, பின் படையலில் வைத்த பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுத்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

 

நன்றி : செந்தில்வயல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *