ஜனாதிபதியான பின் வடக்கிற்கு முதல் விஜயம்; பல்வேறு தரப்பினருடன் பேச்சு


வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட திட்டங்களுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எனினும் விஜயம் செய்யவுள்ள திகதி குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதுமாத்திரமன்றி இளைஞர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின்போது காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மக்களின் அடிப்படை பிரச்சினை,குடிநீர் பிரச்சினை, வேலை வாய்ப்புகள் என்பவற்றோடு வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் வடக்கிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *