கோட்டாபாய ஜனாதிபதி வேட்பாளர் | மகிந்த மொட்டுத் தலைவர் | இலங்கை அரசியலில் திருப்பம்


இலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச அக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுள்ளார். இலங்கையில் அரசியல் நிகழ்வுகளை ஒரே பார்வையில் தருகின்றது வணக்கம் லண்டன்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

gotapaya க்கான பட முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

டுவிட்டர் ட்ரெண்டிங்கில் கோட்டா முதலிடம்

தொடர்புடைய படம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டரில் அவரது பெயர் ட்ரெண் ஆகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டரில் இலங்கை ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

கோட்டாவின் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி கொண்டாட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, யாழ். நகரில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி கொண்டாடினர்.

அதேபோல் கிளிநொச்சியிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் கட்சியின் இணைப்பாளர் சந்திரகுமார் தலைமையில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் இடம்பெற்றதுடன் மக்களுக்கு பாற்சோறும் வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *