நைஜீரியாவில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 48 மாணவர்கள் பலி கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் 50 மாணவர்கள்


நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநில தலைநகரான பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரியில் இன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர்.

இங்குள்ள தொழில்நுட்ப அறிவியல் கல்லூரியில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் இன்று காலை வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அங்குவந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கச் செய்ததில் 48 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இதே பொட்டிஸ்கும் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியானது நினைவிருக்கலாம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *