தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் அனுமதி


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசும் மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.

இது தொடர்பாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் பற்றி பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இரவு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ராபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் துரித நடவடிக்கை எடுத்ததாக தெரிய வருகிறது. ராஜபக்சே ஒப்புதலால் மீனவர்கள் விரைவில் இந்திய சிறைக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *