ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு -வெனிசுலா


தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிகுந்த நாடு. தற்போது கச்சா எண்ணை விலை சரிவால் அந்நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.

இதனால் பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு பொருள் பற்றாக்குறை , போன்ற அத்தியாவசிய குறைகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார சரிவு காரணமாக வெனிசுலாவில் ரூபாயான ‘பொலிவார்’ மதிப்பு சர்வதேச அளவில் சரிந்து விட்டது.

தற்போது 100 பொலிவார் மதிப்பு 2 சென்ட் மதிப்பாக அதாவது அமெரிக்க டாலரில் 50-ல் ஒரு பங்காக குறைந்து விட்டது.

உணவு பொருட்கள் கடத்தப்படுவதால் அவை கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என போர்க் கொடி தூக்கியுள்ளனர். இக்காரணங்களால் வெனிசுலாவில் அரசியல் ஸ்திர தன்மை இன்றி குழப்பம் நிலவுகிறது.

எனவே நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை தவிர்க்க ‘ பொலிவார்’ ரூபாய் நோட்டுகளை ஒழித்து அவற்றின் மதிப்பு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பை அதிபர் நிகோலஸ் மதுரோ நேற்று டெலிவி‌ஷன் மூலம் அறிவித்தார்.

இந்த நடைமுறை வருகிற 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கப்பல், விமானம் மற்றும் வாகன பயன்களுக்கு ‘பொலிவார்’ ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது.

இதன்மூலம் தவறான வழியில் வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும் கடத்தல், உணவு பொருள் தட்டுப்பாடு, உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராட முடியும் என அவர் தெரிவித்தார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *