உலகிலேயே அதிவேகமாக கடக்க உதவும் கால்வாய்- ‘சூயஸ்’ கால்வாய்


எகிப்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படும் புதிய ‘சூயஸ்’ கால்வாய் ஆக., 6ம் தேதி திறக்கப்பட உள்ளது.ஆசியா – ஐரோப்பா மத்திய தரைக் கடல் – செங்கடல் ஆகியவற்றை இணைக்கும் 145 ஆண்டுகள் பழமையான சூயஸ் கால்வாயை ஒட்டி புதிய கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த 10 மாதங்களுக்கு முன் 48,000 கோடி ரூபாய் திட்டச் செலவில் இதற்கான பணி துவங்கப்பட்டது.கால்வாயை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணிகள் ஜூலை 15ம் தேதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.”எகிப்து அதிபர் அல் – சிசி ஒப்புதல் அளித்ததும் ஆக., 6 முதல் புதிய சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து துவங்கும்” என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் மமீஷ் தெரிவித்தார்.புதிய கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்து 22 மணி நேரத்தில் இருந்து 11 மணி நேரமாக குறையும்.
மேலும் உலகிலேயே அதிவேகமாக கடக்க உதவும் கால்வாய் என்ற பெருமையும் இந்த புதிய கால்வாய்க்கு கிடைக்கும்.புதிய கால்வாயுடன் பழைய கால்வாய் நான்கு துணைக் கால்வாய்கள் மூலம் இணைக்கப்படும்.
மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து முனையத்தை புதிய கால்வாய் அருகே அமைக்கவும் எகிப்து திட்டமிட்டுள்ளது.கடந்த 2011ல் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சிக்குப் பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எகிப்துக்கு புதிய சூயஸ் கால்வாய் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *