மிகவும் ஆபத்தான கால்புகோ எரிமலை வெடித்தது மக்கள் இடம்பெயர்வு


43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்டில் இருக்கும் கால்புகோ எரிமலை நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் எரிமலையை சுற்றி உள்ள 20 கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் 3500 அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காவல்துறையினருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *