சவுதி அரேபிய மன்னர் சல்மான் விரைவில் பதவி விலகும் படி வலியுறுத்தல்


சவுதி அரேபியாவில் மன்னர் ஆக 79 வயது சல்மான் பதவி வகித்து வருகிறார். இவர் பதவி விலகும் படி அவரது தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்கள் சமீபத்தில் மரணம் அடைந்த அவரது தந்தையின் மனைவிகள் மூலம் பிறந்தவர்கள். மன்னர் சல்மானுக்கு 12 தம்பிகள் உள்ளனர். அவர்களில் உயிருடன் உள்ள 8 பேர் இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவருக்கு பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க முடிவு செய்துள்ளனர். இவர் முன்னாள் உள்துறை மந்திரி ஆவார். இவருக்கு ஆதரவாக இஸ்லாமிய மத தலைவர்களும், உலமாக்களும் உள்ளனர்.

சவுதி அரேபிய அரசியலில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மன்னர் சல்மான் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக நியமித்தார்.

மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது அவரது தம்பி மார்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன.

எனவே, அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி மறைமுக அதிகார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகவல் அதிருப்தி இளவரசர் ஒருவர் எழுதிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ மந்திரி ஆகவும் இருக்கிறார். அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மன்னர் சல்மானுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பது விரைவில் தெரியும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *