ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல்


தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை ஆஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பார்லிமென்டில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் தற்போது சிங்கப்பூர். இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது. கனடாவில் ஜனவரி மாதம் தமிழ்ப் பராம்பரிய மாதமாக கொண்டாட்ப்படுகிறது. அங்கு தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மொரீசியஸ் மற்றும் செசெல்ஸ் நாட்டு கரன்சிகளில் தமிழ் அச்சிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள பிரஞ்ச் பகுதியான ரியூனியனில் கலாச்சாரம் மற்றும் அரசியலில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.இது தவிர இந்தியாவில் அரியானா மற்றும் சண்டிகரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பார்லிமென்டில் ஹியூஜ் மெக் டெர்மட் என்ற உறுப்பினர் இதை வலியுறுத்தி பேசி உள்ளார். இவருடைய பேச்சுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் வானொலி ஆதரவு தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *