மைத்திரி யுகத்தில்! அகதிமுகாம் மக்களுக்கு விடிவு கிடைக்குமா?


யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 1996ம் ஆண்டு வவுனியா – பூந்தோட்டத்தில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு இதுவரை காலமும் மீள்குடியேற்றப்படாமல் வாழ்ந்துவரும் மக்கள் தங்களை விரைவில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

1996ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்ட பலர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

எனினும் தற்போது அந்த முகாமில் 125 குடும்பங்கள் வரை மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். சிறுவர்கள் பெரியார் என்றில்லாமல் அவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்களுக்கான நிவாரணங்கள்இ மின்சாரம்இ தண்ணீர் போன்றன நிறுத்தப்பட்டுள்ளது. மலசலகூட வசதிகள்இ தொழில்வாய்ப்புகள் இன்றி இந்த மக்கள் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றனர்

இதன் காரணமாக இம் மக்கள் கடந்த மழை காலத்தில் பெரும் துன்பத்திற்கு முகம் கொடுத்திருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமக்கு சொந்தமான காணிகளை தந்து தம்மை மீள்குடியேற்றுமாறு அதிகாரிகளிடம் கோரியபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒழுங்கான வாழுமிடமோ ஆரோக்கியமான எதிர்காலமோ இஇல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இஇவர்களுக்கு சொந்த வீடு கிராமம்  ஜீவனோபாயம் என்ற தமது அடிப்படை அடையாளங்களை இஇழந்து வேற்றுநிலத்தில் நாளாந்த தேவைகளுக்கும் கையேந்தும் நிலையில் கண்ணீருடன் வாழ்கின்ற இஇந்த மக்கள் இஇப்புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் மீள்குடியேற்றப்படுவார்களா? இவர்களின் கண்ணீருக்கு பதில் கிடைக்குமா?

unnamed

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *