புத்திசாலித்தனத்தை தூண்டுவதற்கு மாத்திரை?


தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மோடபினில்(Modafinil) என்கிற மாத்திரை புத்திசாலித்தனத்தை தூண்டுவதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இதனை ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நீண்ட நேரம் பணிபுரியும் காவல் துறையினருக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 24 வெவ்வேறு துறைகளின் கீழ் சோதனை செய்யப்பட்டது.

இதில் திட்டமிடல், முடிவெடுப்பது, ஞாபக சக்தி, கற்றல் திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற அறிவாற்றல் சம்பந்தப்பட்டவற்றில் மேம்பாடு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக் குழுவில் பங்கு வகித்த அன்னா கேத்தரின் ப்ரெம், ‘இம்மாத்திரையில் சில பக்க விளைவுகள் இருப்பினும் இது புத்திசாலித்தனத்தை மேம்படுத்த உதவுகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தூங்குவதில் குறைபாடு உள்ளவர்களுக்கும், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இந்த மாத்திரை உதவும் என்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் சில நிறுவனங்களால் விற்கப்படும் இந்த மாத்திரைகள், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைப்படி விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் இந்த மாத்திரைக்கு அடிமையாகலாம் என்பதால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த நாட்டிலும் இந்த மாத்திரைக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *