2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் தாக்குதல் வழக்கு நேற்று தீர்ப்பு


2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து தாக்குதலுக்கு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கனகசபை தேவதாசன் என்கிற நாதன் என்பவர் மீது கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பியசேனா ரனசிங்கே, “குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே நாதனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *