தென்கொரியா மீது ஏவுகணை தாக்குதல்


அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் போர் பயிற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா, 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், இரு கொரிய நாடுகள் இடையே, போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், தென்கொரியா, அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து, இரு மாதங்களுக்கு போர் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இது, தன் மீது போர் தொடுப்பதற்கான முயற்சி என, வடகொரியா கண்டித்து வருகிறது. இந்த போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா, கடந்த, 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில், அணுகுண்டு சோதனை நடத்தியது.கடந்த ஜனவரியில், ‘அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் இந்தாண்டு கூட்டு போர் பயிற்சியை ரத்து செய்தால், அணுகுண்டு சோதனை நடத்த மாட்டோம்,’ என, வடகொரியா கூறியது.ஆனால், ‘இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்’ என்று கூறிய அமெரிக்கா, அதன் முப்படையை சேர்ந்த, 3,400 வீரர்களை தென்கொரியாவிற்கு அனுப்பியது. இவர்கள், தென்கொரியாவை சேர்ந்த, 2 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினருடன் இணைந்து போர் பயிற்சியை துவக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, துறைமுக நகரமான நம்போவில் இருந்து தென்கொரியா மீது, இரண்டு ஏவுகணைகளை ஏவியது. இவை, 500 கி.மீ., தொலைவில் உள்ள, தென்கொரியாவிற்கு கிழக்கே உள்ள கடல் பகுதியில் விழுந்தன.இச்செயலை, தென்கொரியாவும், அமெரிக்காவும் கடுமையாக கண்டித்துள்ளன.ஏவுகணை தாக்குதல் காரணமாக, வடLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *