ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்


ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி., பணியாளர்கள் அங்கு தொடர்ந்து தங்கிப் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விசா விதிகளை பிரிட்டன் கடுமையாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான புதிய நுழைவு இசைவு விதிகளை அந்நாட்டு அரசு நேற்று(04-11-16) அறிவித்தது. இதன்படி நிறுவனத்துக்கு உள்ளேயே பணியாளர்களை இடமாற்றம் (ஐசிடி) செய்வதற்காக இரண்டாம் நிலைப் பிரிவில் விசா பெறுவதற்கு இதுவரை இருந்த அதிகபட்ச ஊதிய வரம்பை 20,800 பவுண்ட்டிலிருந்து(சுமார் ரூ.17.36 லட்சம்), 30 ஆயிரம் பவுண்ட்டாக(சுமார் ரூ.25.05 லட்சம்) உயர்த்தியுள்ளது. இப்புதிய விதி நவ.,24ம் தேதிக்குப் பின் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும்.

 
பிரிட்டனின் இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்று பணியாற்றும் ஐ.டி., பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் 90 சதவீதம் ஐ.சி.டி., முறையில்தான் பணியாளர்களை பிரிட்டனுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *