தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே நடைப்பெறுகின்றது – ஜீ.எல்.பீரிஸ்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட பின்னர்   அதை  பற்றி பேசிய தன்னை இரகசியப் பொலிஸூக்கு அழைத்து விசாரணை செய்தனர்.  எனினும் இது பற்றி பேசிய சிவாஜிலிங்கத்தை அவ்வாறு அழைக்கவில்லை அதேவேளை விசாரணை எதுவும் முன்னெடுக்கவில்லை  எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வருவது தேசிய அரசாங்கம் என்ற பெயரில்  ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே நடைப்பெறுகின்றது எனவும் குறிப்பிட்ட ஜீ.எல்.பீரிஸ் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு தேவையான விதத்தில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்கி தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்ப்பு வெளியிடுவதில்லை  எனவும் கூறியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *