இலங்கையில் மரணதண்டனை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரூக்கு


இலங்கையின் மத்திய மாகாணம் நுவரேலியாவில் உள்ள ஒரு மலைப்பிரதேச தோட்டத்தில் கடந்த 2000ம் ஆண்டு தொழிலாளி பெரியசாமி சண்முகநாதன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள், அவர்களின் மூன்று பிள்ளைகள் என கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நுவரேலியா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2000-வது ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழககு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 7 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபணமானதையடுத்து அவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய அபராதத்துடன் மரணதண்டனை விதித்து நீதிபதி லலித் ஏகநாயக தீர்ப்பளித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *