1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை திடீரென தோன்றிய அதிசயம்


அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை, கடஅயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.ந்த திடீரென தோஅயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அயர்லாந்தில் உள்ள தீவு அசில். இங்குள்ள சிறிய கிராமம் டூவாக். இங்கு 300 மீட்டர் நீளத்தில் அழகான கடற்கரை இருந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்று கொண்டிருந்தனர். ஹோட்டல், ஹெஸ்ட் ஹவுஸ், கஃபே போன்றவகைகளுடன் கடற்கரை அழகாக காட்சியளித்தது.

கடந்த 1984-ம் ஆண்டு திடீரென வசந்த கால சூறாவளி புயல் அடித்தது. கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கடற்கரையில் உள்ள டன் கணக்கான மணல் காணாமல் போனது. கடற்கரையும் இருந்த இடம்தெரியாமால் போனது. பெரிய பெரிய பாறைகள் மட்டும் இருந்தன. ஆனால், ஆங்காங்கே குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறையத் தொடங்கியது.

சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் கடற்கரை அருகில் இருந்த ஹோட்ல், கஃபே, ஹெஸ்ட் ஹவுஸ்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில், கடலில் வழக்கத்திற்கு மாறான அலை எழுந்தது. இந்த அலையானது, டன் கணக்கில் மணல்களை கரைக்கு கொண்டு வந்து குவிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக காணாமல் போன கடற்கரை மீண்டும் உருவாகத் தொடங்கியது.

இந்த ஆச்சர்யமான சம்பவத்தை கண்டு அங்குள்ள மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளன. மேலும், இந்த கடற்கரை நீண்ட ஆண்டுகளாக இப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *