அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமலுக்கு போலீசார் சம்மன்


இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல். இவர் எம்.பி. ஆக இருக்கிறார். ராஜபக்சே அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இவர் மீது புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் இவருக்கு புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அவர் வருகிற 12–ந்தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தெரியவில்லை. இந்த தகவலை நமல்ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது தாயார் ஷிரந்தி ராஜபக்சே லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். ஊழல் வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *