தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்…


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அவரது பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்டாக்கி வருகிறார்கள். கிரிக்கெட் தெரியாத, புடிக்காதவர்களைப் கிரிக்கெட் பாக்கவைத்த பெருமை கண்டிப்பாக தோனிக்கும் உண்டு. இன்றும் கிரிக்கெட் தெரியவில்லை என்றாலும் தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸைப் பார்க்கவும், மின்னல் வேகத்தில் அவுட்டாக்கும் ஃபீல்டிங்கைப் பார்க்கவும் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பலர்.

சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் என்பதைத் தாண்டி மக்களைக் கவரும் மனிதன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

இதன் காரணமாக தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் ட்வீட் செய்திருக்கிறார். தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,

’’என் நண்பன், என் தலைவன், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல, இப்பிடி சொல்லிட்டே போலாம். சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி தோனி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா! சென்னை மக்களின் நிரந்தர சொந்தமே உலக கோப்பை வென்று வா! ’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *