பாகிஸ்தான் அணியுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் – ஹர்பஜன்


நாம் முதலில் இந்தியர்கள், பின்னர் தான் விளையாட்டு வீரர்கள் என்று தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் உலகக்கோப்பை கிரிக்கெட் தோரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், நாம் முதலில் இந்தியர்கள், பின்னர் தான் விளையாட்டு வீரர்கள். நாம் நமது நாட்டிற்காக விளையாடுவதால் தான் ரசிகர்கள் நம்மை ஆதரிக்கின்றனர். ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கும் போது தேசத்தைக் காட்டிலும் உலகக்கோப்பை ஒன்றும் பெரிது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் கூறுகையில், ஹர்பஜன் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.

அதே போன்று இரு அணிகளுக்கு இடையேயான எந்த வகையான போட்டியிலும் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *