தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்!


இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.

 

இரவும் பகலும் சமமாக மாறிவருவதே தூக்கத்தின் இன்றியமையாமையை காட்டும். பகலில் உழைப்பும், இரவில் தூக்கமும் அப்போதுதான் சாத்தியமாகிறது. மனித உடல் மனம் இரண்டும் சமநிலையில் இருக்க இயற்கையின் இரவு பகல் அமைப்பு தேவையாகிறது.

நமது மூளையில் ‘பீனியல் சுரப்பி’ என்று ஒரு சுரப்பி இருக்கிறது. இது ‘மெலடோனின்’ என்ற சுரப்பை சுரக்கிறது. வெளிச்சத்தில் இச்சுரப்பி வேலை செய்யாது. இந்த சுரப்பு இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவும். அதுவே நமக்கு தூக்கத்தை தருகிறது.

இரவில் கண்விழித்து வெளிச்சத்தில் வேலைபார்த்தால் இச்சுரப்பி வேலை செய்யாது. இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு போன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.

இயல்பாக தூங்கினால் உடலும், மனமும் சுகம் பெறும். வலிமை பெறும். நல்ல சங்கீதம் கேட்டால் தூக்கம் வரும். தயிர் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

தலையில் எண்ணெய் தேய்த்து, சில நிமிடம் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் குளித்து பின் சூடாக பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.

 

நன்றி : வெப்துனியா

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *