புதிதாக மூன்று நீதிமன்றங்கள் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகின்றது


யாழ்ப்பாணத்தில் புதிதாக மூன்று நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. இவ் நீதிமன்றத்திற்கான புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளன.

அதன்படி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சும் பங்குபற்றவுள்ளதுடன் அவரால் இந்த கட்டிடங்களும் திறந்துவைக்கப்படவுள்ளன.

158 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி காலை 9 மணிக்கும்,

175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முற்பகல் 11.30 மணிக்கும்,

127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதி பிற்பகல் 2.30 மணிக்கும் திறந்து வைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த மூன்று நீதிமன்றங்களும் தனியாருக்கு சொந்தமான வீடுகளிலேயே இதுவரை இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

jaffna-2Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *