அபுதாபியிலிருந்து ரொட்டானா ஜெட் விமான சேவை முதல் சேவையை 9ம் திகதி தொடங்குகின்றது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரொட்டானா ஜெட் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான முதலாவது விமான சேவையை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி அல்- பட்டின் விமான நிலையத்திலிருந்து 9ஆம் திகதி இரவு 11.45 க்கு ஏ- 319 ரக விமானம் இலங்கை நோக்கிப் புறப்படும். இந்த விமானம் அதிகாலை 5.45 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும்.

10ஆம் திகதி மீண்டும் இந்த விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கிப் புறப்படும்.

12 பிஸ்னஸ் கிளாஸ் ஆசனங்களையும் 120 சாதாரண ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் வாரத்தில் மூன்று தினங்கள் சேவையில் ஈடுபடும்.

10 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த விமானம் 7.15க்கு மத்தள விமான நிலையத்தை சென்றடையும்.

8.15க்கு அபுதாபி நோக்கிப் புறப்படும். வெள்ளிக்கிழமைகளிலும் இதே நேர அட்டவணையின்படியே சேவை நடத்தப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

சனி மற்றும் புதன்கிழமைகளில் காலை 10.45க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம் 11.45க்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்டு மத்தள விமான நிலையத்தை சென்றடைந்து பகல் 1.30 க்கு மத்தள விமான நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கி பயணமாகும் என்றும் அமைச்சர் பிரயங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

rotana-jet-flight-to-fujairah-235594Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *