புதுச்சேரி தாழி அறக்கட்டளை நடாத்தும் திருக்குறள் போட்டி 19 ஆம் நாள் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது


தாழி என்பது நம் முதுமக்களின் சவக்கலன் அப்பெயருடன் புதுச்சேரியில் தாழி அறக்கட்டளை என்னும் பெயருடன் ஒரு தன்னார்வ நிறுவனம் இயங்குகின்றது. நம் மூதாதையரை எண்ணிய நிலைப்பாட்டுடனே அப்பெயர் நிற்கின்றது.

தாழி இதுவரை யார் ஒருவரது பொருட் துணையும் பெறாது எம் அளவிலான துணையுடன் மட்டும் நடக்கும் ஒரு நிறுவனம். இன் நிறுவனம் ஆண்டுதோறும் திருக்குறளில் போட்டிகளை உலக அளவில் நடாத்துகின்றது.

2014ம் ஆண்டுக்கான போட்டிகளில் கலந்துகொள்வதற்கு இம்மாதம் 16 ஆம் நாளாக இருந்த முடிவுத்திகதி 19ம் நாள் வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கட்டுரைப் போட்டி தமிழ் ஆங்கிலம் ஃப்ரென்ச்சு ஆகிய மொழிகளில் அமையலாம். இதன் அறிவிப்பு  மற்றும் வேண்டுகைப் படிவம் ஆகியன தாழியின் வலைத்தளத்துள் இருக்கின்றது.

www.thazhi.org

 

அறிவன் | வணக்கம்LONDON க்காக புதுச்சேரியில் இருந்து 

 

 

dhd

gfhgfLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *