ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு | 29 பேர் உயிரிழப்பு, பலர் காயம்


 

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் பெரும்பான்மையான சியா பிரிவினரைக் கொண்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 29 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸாட்ரியா மாவட்டத்தின் மத்தியிலுள்ள சந்தையில் சனநெரிசலான நேரத்தில் கார்க் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, ஸாகாப், ரூப்ஸி, ஹர்ராடா, ஆஸமியா மற்றும் ஆமில் ஆகிய பகுதிகளிலுள்ள சனநெரிசலான வீதிகளிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அண்மை மாதங்களாக நாடு முழுவதும் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அக்டோபரில் வன்முறை தாக்குதல்களில் 158 பொலிஸ் மற்றும் 127 இராணுவம் உட்பட 979 பேர் கொல்லப்பட்டிருந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து 6500 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *