13 வருடங்களாக சிறையில் வாடும் சவுதி இளவரசிகள்.


சவுதி அரேபியாவின் நான்கு இளவரசிகளும் கடந்த 13 வருடங்களாக தனிமைச்சிறையில் வாடுகின்றனர் என்றும், அவர்கள் நான்கு பேர்களையும், அதிரடி நடவடிக்கை எடுத்து ஒபாமா மீட்டுத்தர வேண்டும் என்றும், சவுதி அரேபிய முன்னாள் அரசி கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியா மன்னரின் முன்னாள் மனைவி 57 வயதான Alanoud AlFayez அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் “சவுதி அரேபிய மன்னர் King Abdullah, தனது நான்கு மகள்களையும் வெளியுலகை பார்க்க முடியாமல் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாகவும், அவர்கள் 24 மணிநேரமும், ஆயுதம் தாங்கிய போர்வீரர்கள் பாதுகாப்பில் இருந்து வருவதாகவும், அவர்கள் நான்கு பேர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க மன்னருடன் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபிய மன்னரை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து செய்த Alanoud AlFayez, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க விவாகரத்து பெற்ற உடனே லண்டனுக்கு பறந்துவிட்டார். கடந்த 11 வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வரும் Alanoud AlFayez, தான் அரசியாக இருந்த போதே தானும், தன்னுடைய மகள்களும் வீட்டுச்சிறையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் உள்ள இளவரசிகளில் Sahar, 42, and Jawaher, 38 ஆகிய இரண்டு பேர்கள் மட்டும் சமீபத்தில் சேனல் 4 தொலைக்காட்சிக்கு இண்டர்நெட் மூலம் பேட்டி அளித்து தாங்கள் சிறையில் கொடுமைப்படுவதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதவி கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒபாமா தலையிடுவாரா என்று சவுதி அரேபியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றன.

article-0-1CA21F6900000578-661_634x424Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *