காளி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் விதுரா கோவில்!


திருவனந்தபுரம்: சாமி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் தேவியோடு காளி கோவில் அமைந்துள்ளது. அங்கு பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காளி சிலைக்கு ரத்தத்தால் ஆன குளியல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரத்தம் தானமாக பெறப்படுகிறது.

இதையொட்டி கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ரத்தம் பெற பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நன்றி : சமயம் இணையம்

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *