கணவனும் மனைவியும்


நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் “நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் “இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ரூபாய் பணமும் இருந்தது.

அதை பார்த்து “இது என்ன?” என்று கேட்ட மனைவிக்கு கணவன்

” உனக்கு எப்பொழுதெல்லாம்­ துரோகம் செய்கிறேனோ.. அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்” என்றான்

கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்

“சரி… அதில் ஒரு லட்ச ரூபாய் இருக்கே. அது என்ன கணக்கு?”

கணவன் சொன்னான்.

“அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு”

 

 

நன்றி : சந்திரா | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *