உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி


ஐசிசி, சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை, உலக டி-20 நடத்தப்படுகிறது. இந்நிலையில் புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது உலக டி – 20 என்ற பெயரை வரும் 2020 இல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் “ஐசிசி ஆண்கள் டி -20 உலகக்கோப்பை”, “ஐசிசி பெண்கள் டி -20 உலகக்கோப்பை” என மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 இல் ஆஸ்திரேலியாவில் அடுத்து வரும் உலக டி -20 தொடர்கள் ஐசிசி ஆண்கள் டி -20 உலகக்கோப்பை, ஐசிசி பெண்கள் டி -20 உலகக்கோப்பை என மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடக்கும் தொடர்களில் இருந்து இந்த தொடர்களின் முக்கியத்துவம் தனியாகத் தெரிய வேண்டும். அதற்காக தான் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

 One thought on “உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி

  1. அற்புதம், அற்புதம் / இதுபோல

    திராவிடர் கழகம் = தமிழர் கழகம்
    திராவிட முன்னேற்ற கழகம் = தமிழர்முன்னேற்ற கழகம்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் = தமிழக நடிகர்கள் சங்கம்
    என்று மாற்ற வாய்ப்பு இருக்குது தானே!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *