ஐசிசி விருதுகளை அள்ளி அசத்தும் கோலி!


ஐசிசி, சார்பில் வழங்கப்படும் மூன்று முக்கிய விருதுகளை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐசிசி, விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வரிசையில் 2018ம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

இதில் இந்திய கேப்டன் விராட்கோலி, மூன்று முக்கியமான விருதுகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார். அதேபோல இந்து மூன்று விருதுகளை ஒரே ஆண்டில் பெற்ற முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார் கோலி.

ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் போன்ற விருதுகளே அவையாகும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *