ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கக் கூட்டம்.


“தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் 219 ஆவது எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம் ஞாயிற்றுக்கிழமை தனியார் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சி. முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

இதில், கடையநல்லூர் கவிஞர் காசீம் எழுதிய கவிதை தொகுப்பு குறித்து, கவிஞர் விநாயகமூர்த்தி, பெ. திருப்பதி, எழுத்தாளர் அபூர்வன்ராஜா, பேராசிரியர்கள் அன்னலட்சுமி, முத்துலட்சுமி மற்றும் அகரமுதலி குழு உறுப்பினர் கவிஞர் சுரா ஆகியோர் பேசினர். கவிஞர் காசீம் ஏற்புரையாற்றினார்.

பின்னர், இவரை கிளை நிர்வாகிகள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். படைப்பரங்கில் தென்காசி கவிஞர்கள் எஸ். தங்கராசா, ஏ.எம்.ராஜா என்ற ராஜ், புனல்வேலி ஆல. தமிழ்ப்பித்தன், ஐ.க. சோமசுந்தரம் மற்றும் அங்குராஜ் ஆகியோர் படைப்புகளை வாசித்தனர்.

இந்நிகழ்வில், எழுத்தாளர் பூ.அ. துரை ராஜா, சமூக ஆர்வலர் க.துள்ளுக்குட்டி, ஆ.முத்துராமன், வைத்தியலிங்காபுரம் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, துணைச் செயலாளர் அ.சந்திரசேகர் வரவேற்றார். நிர்வாகி ப.அடைக்கலம் நன்றி கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *