இசைஞானி இளையராஜா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா!


தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வருகிற பெப்ரவரி 2 & 3 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா” அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பிரத்யேக பத்திரிகையாளர் சந்திப்பு செங்கல்பட்டு ”மஹிந்திரா சிட்டி” வளாகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.

”இசைஞானி இளையராஜா” அவர்களே நேரிடையாக கலந்து கொள்ளும் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக ”இயக்குநர் திரு பார்த்திபன்” அவர்களுடைய வித்தியாசமான யோசனையில் 500 ஹார்மோனியக் கலைஞர்கள் இசைஞானியின் பின்னணியில் இசைப்பது போல் ஒரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இசைக்கலைஞர்கள் ஹார்மோனியத்துடன் கலந்து கொள்ள அழைத்து நிற்கிறார்கள். அத்துடன், விருப்பம் உள்ள கலைஞர்கள் 99404 – 82444 என்ற எண்ணில் திரு. ஜெரோம் அவர்களை தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 6 ஆம் தேதி காலை 9.00 மணிக்குள் அனைவரும் தென்னிந்திய இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு ( கமலா திரை அரங்கம் அருகில் ), வெந்நிற வேட்டி சட்டையில் வரும்படி தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமன்றி, மதிய உணவு அனைவருக்கும் மஹிந்திரா சிட்டி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்தும் கலைஞர்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *