தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகம்! ஆய்வில் தகவல்


சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்று தருவதால் அறிவுத்திறன் வளர்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக பள்ளிகளில் வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் தாய்மொழியையும் கற்றுத் தருவதால் அறிவுத்திறன் கூர்மையாக இருக்கிறது.

7 முதல் 11 வயது வரையுள்ள 100 துருக்கி நாட்டுக் குழந்தைகளை ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழகம்.

வீட்டில் துருக்கி தாய்மொழியிலும், பள்ளிகளில் ஆங்கில மொழிகளையும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

இவர்களின் இளம் வயதிலேயே அவர்களது மொழிகளை கற்று கொள்வதில் இருக்கும் சிரமங்களை பற்றி நன்கு புரிந்து கொள்கின்றனர். இதனால் அவர்களால் எளிதில் வேறு மொழிகளை கற்று கொள்ள முடியும். அதில் உள்ள சிரமத்தையும் சுலபமான முறையில் கையாள்வார்கள்.

ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் உள்ள வேறுபாட்டை இலகுவாக அறிந்து கொள்கிறார்கள். பள்ளிகளில் கற்று கொடுக்காத மொழிகளை வீட்டில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கற்றுத் தருவதால் அவர்களின் அறிவுத்திறன் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஆய்வின் முடிவில் கூற வருவது மொழிகளை கற்பதால், கற்பிப்பதால் அவர்களின் அறிவுத்திறன் அதிகம் வளரும் என்பதே.

 

நன்றி : tamil.eenaduindia.com

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *