தண்ணீர் இன்றி அழகா… ஆரோக்கியமா…


இந்த தலைப்பை வாசிக்கும் நீங்கள் உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக நிறைய விடயங்களை பின்பற்றுபவராக இருக்கலாம்; இல்லை அழகு அழகு என்று அதற்கு என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று முயற்சி செய்பவராக இருக்கலாம்; வயது முதிர்ந்த தோற்றத்தை மறைக்க அல்லது மாற்ற நினைப்பவர்களாக இருக்கலாம்; மருத்துவ ரீதியாக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துபவர்களாக இருக்கலாம்; சுறுசுறுப்பான சிறுவர்கள், இளைஞர்களாக இருக்கலாம்; இல்லை அக்கடா……என்று என்னவோ ஏதோ என்று வாழ்பவர்களாக இருக்கலாம்.

யார் என்ன நிர்ப்பந்தத்தில் வாழ்பவர்களாக இருப்பினும் ஆரோக்கியம் பிரதானம்; அதுவே அழகையும் தருகிறது. சரி, இன்றைய காலகட்டத்தில் என்னென்ன விடயங்கள் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்… வேலை, உணவு, நித்திரை, ஓய்வு, தொலைக்காட்சி, கணனி, கைப்பேசி, இணையம், வாழ்க்கை முறை, கல்வி, மனநிலை, சமூக உறவுகள் மற்றும் நட்பு வட்டாரம் போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்தலாம்.

இதையெல்லாம் பற்றி நாம் இங்கு அலசப் போவதில்லை. மாறாக தண்ணீர் சரியாக அருந்தாமையால் ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நல்ல சுத்தமான தண்ணீர் தினமும் அருந்துவதால் நீங்களே உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும்.

ஒருநாளைக்கு ஒருவர் சராசரியாக 8 குவளைகள் நீர் அருந்த வேண்டும் அல்லது 1 முதல் 2 லீற்றர் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எந்த சூழல் சுவாத்தியத்தில் வாழ்பவர்களுக்கும் இது பொருந்தும்.இதை ஒரே வாக்கில் கடைப்பிடிப்பது கடினம் என்று நினைப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அலட்சியம் வேண்டாம்.

ஒரு நாள் என்பது 24 மணி நேரம் ஆக ஒரே மூச்சில் இவ்வளவு நீரையும் அருந்துவது பொருந்தாது.மேலும், கால இடைவெளியில் தண்ணீர் உடலுக்கு அவசியப்படுகிறது. குறிப்பிடும் கால இடைவேளைகளில் அருந்த முடியும்.
இதை 8 வேளைகளில், 12 வேளைகளில் அல்லது 4 ,6 வேளைகளில் எவ்வாறாயினும் அவரவர்க்கேற்ப பிரித்துக் கொள்ளலாம். இப்படி தீர்மானித்தபடி நீர் அருந்துவது சாத்தியமா? சாத்தியமே.

water drinking

டெக்னோலொஜி அவ்வளவு வளர்ந்துஉள்ளது.ஆம், நிறைய apps நீர் அருந்த வேண்டிய நேரத்தை நினைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன; அவற்றைப்பயன்படுத்த முடியும். ஆனால்,இவை இல்லாமலும் சரியாக நீரை அருந்த முடியும். உங்கள் மனதில் தண்ணீர் பருக வேண்டும் என்பதன் அவசியத்தை பதிந்து கொண்டீர்களானால், உங்கள் உடல் தண்ணீர் கேட்பதை நீங்கள் அவதானிக்க முடியும்.எப்போது தேவையோ அப்போது தண்ணீர் பருகலாம்.சரியாக தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். எவ்வளவு நாட்களில் பலன் கிடைக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்தது.பொதுவாக 14 முதல் 21நாட்களில் பலன் கிடைக்கும் என்று வைத்து கொள்ளலாம். உண்மையில், நீங்கள் எடுக்கும் முயற்சி, முதல் நாளில் இருந்தே உங்களுக்கு பலன் தர தொடங்கி விடும்.ஆனால் எப்போது இந்த பழக்கத்தை தவிர்க்கிறீர்களோ, அன்றிலிருந்து இதன் பலன் இல்லாமல் போகும். ஆக இதை ஒரு வாழ்க்கை முறையாக கடைப்பிடிப்பது சிறந்தது.

இன்னுமொரு வினா ஏற்படுவது சகஜம்.
அடிக்கடி தண்ணீர் அருந்துவதனால் அடிக்கடி கழிப்பறைக்கு செல்லவேண்டுமே? என்பது தான். ஆம், எப்படி தண்ணீர் உடலுக்கு முக்கியமோ, அதே போல, உடற்கழிவுகள் நீருடன் வெளியேறுவதும் முக்கியமாகும். ஆக இது பலவழிப்பயன்.

 

நன்றி : ஒரு துளி இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *