தொழிலதிபரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!


50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி இம்ரானை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஐஸ் அவுஸ் பகுதிகளில் பிரியாணி கடை உரிமையாளர்களை மிரட்டி பல லட்சம் பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரை சேர்ந்த தொழிலதிபர் மக்பூல் பாஷா (37) என்பவர் கடந்த 4ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், எனக்கு 91504 73915 என்ற எண்ணில் இருந்து எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நான் இம்ரான் என்றும் எனக்கு 50 லட்சம் வேண்டும் எனக்கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இரண்டு நாட்கள் அவகாசத்தில் பணம் கொடுக்க வில்லை என்றால் என்னையோ அல்லது எனது தம்பியையோ மற்றும் வீட்டில் உள்ளவர்களையோ கொலை செய்து விடுவேன். அதற்கு ஈடாக உங்கள் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நஷ்டஈடு அனுப்புகிறேன்.

இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்தாலும் எனக்கு எந்த பயமும் இல்லை. நான் ஏற்கனவே 10 கொலை செய்து உள்ளேன். அடுத்தது உங்கள் வீட்டில் நடக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் ஐஸ்அவுஸ் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்களை மிரட்டி பல லட்சம் பணம் பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரவுடி இம்ரானை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்ரான் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவரை ஓடஓட வெட்டிய கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-PuthiyathalaimuraiLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *