இந்திய அணியின் அடுத்த வருடத்திற்கான போட்டி அட்டவணை!


இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வருட ஆரம்பத்திற்கான, எதிர்பார்ப்பு மிக்க போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 6ஆம் திகதி வரை 22ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இத்தொடரையடுத்து, ஜனவரி 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை சிம்பாப்வே அணி, இந்தியாவில் 3 ரி-20 போட்டிகளில் விளையாடுகின்றது. அதன்பிறகு அவுஸ்ரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இந்த தொடர் ஜனவரி 19ஆம் திகதி நிறைவடைகிறது.

இதற்குப் பிறகு இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. எனினும் இந்தியாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டிக்கும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள முதல் ரி-20 போட்டிக்கும் இடையே 4 நாள்கள் இடைவெளி மட்டுமே உள்ளன.

அடுத்த வருட ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் றேம்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, அங்கு சென்று மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதன்படி அங்கு செல்லும் இந்தியா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.

ஜனவரி 24ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை ரி-20 தொடர் நடைபெறவுள்ளது. மேலும், பெப்ரவரி 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை ஒருநாள் தொடரும், பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மார்ச் 4ஆம் திகதி வரை டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.

அதேபோல நியூஸிலாந்து தொடர் மார்ச் 4ஆம் திகதி நிறைவடைகிறது. இதன்பிறகு இந்திய அணி, இந்தியாவில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

மார்ச் 18ஆம் திகதி இத்தொடர் நிறைவடைகிறது. இதன்பிறகு இரு வாரங்கள் இடைவெளியின் பின்னர் 2020ஆம் ஆண்டுக்காக ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து வீரர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆனால் முக்கியமான தொடர்களுக்கு மட்டும் முன்னணி வீரர்களை உள்வாங்கிவிட்டு, சிறிய தொடர்களுக்கு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கபடுகின்றது.

நன்றி – AnojkiyanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *