பதவியெற்கவுள்ள மோடியின் வெளிநாட்டு பயண விவரம்!


மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியைத் தொடர்ந்து பதவியெற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அடுத்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

அந்தவகையில், கிர்கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா என பல நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பயண விவரம் வருமாறு,

ஜுன் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

ஜுன் 28, 29ஆம் திகதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஓகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸிற்கு செல்கிறார்.

செப்டெம்பர் முதல் வாரத்தில் ரஷ்யா செல்கிறார்.

செப்டம்பர் 3ஆவது வாரத்தில் நியூயோர்க் செல்கிறார்.

நவம்பர் 4ஆம் திகதி பாங்ஹொக் செல்கிறார்.

நவம்பர் 11ஆம் திகதி பிரேசில் செல்லவுள்ளார்.

இதேவேளை, வரும் 30ஆம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *