இலங்கைக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மீண்டும் அச்சுறுத்தல்!


இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் றோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தி செயற்பட்டுவந்த ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பிரதேசங்கள் தற்போது அவர்களிடம் இல்லை. ஆகையால், இந்து சமுத்திர நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன.

கேளராவிலில் சுமார் 100 பேர்வரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் குறுகிய காலப்பகுதிக்குள் இணைந்துள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் வெவ்வேறு அமைப்புக்களுடன் கேரளா பகுதியில் தொடர்பு வைத்துள்ளனர்” என றோ அக்கடிதத்தில் கூறியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி -Yuganthini



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *