இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து!


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் இடை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், போட்டி இன்று நடைபெற்றது. மீதமிருந்த 3.5 ஓவர்கள் பந்து வீசப்பட்டது.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக ரோஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர்.

மூன்று பேரும் தலா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

பின்னர் அணிக்காக ஒன்று சேர்ந்த ரிஷாப் பேண்ட் மற்றும் ஹர்திக் பாண்டிய அணிக்காக நிதானமாக விளையாடி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.

தொடர்ந்த விளையாடிய இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இந்தியா அணி 18 ஓட்டங்களால் போட்டியில் தோல்வியடைந்தது.

அதனடிப்படையில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *