இந்தியா – நியூசிலாந்து, ஆஸி – இங்கிலாந்து பலப்பரீட்சை


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா நியூசிலாந்து, அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் அரையிறுதி ஆட்டம் இன்று 9-ம்திகதி (செவ்வாய்க்கிழமை) மான்செஸ்டரில் மாலை 3 மணிக்கு நடக்கிறது.

இதில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ம் திகதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்ட் ரொபின் முறையில் தலா ஒருமுறை மோதின.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. கடந்த சனிக்கிழமை ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. மொத்தம் 45 ‘லீக்’ ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

‘லீக்’ முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தன.

முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு நுழைந்தன.

பாகிஸ்தான் 11 புள்ளியுடன் 5-வது இடத்தை யும் இலங்கை 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும், தென்ஆபிரிக்கா 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தையும், பங்களாதேஷ் 7 புள்ளிகள் பெற்று 8 இடத்தையும், மேற்கிந்திய தீவு அணி 5 புள்ளியுடன் 9-வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.

2-வது அரையிறுதி ஆட்டம் 11-ம்திகதி (வியாழக்கிழமை) பர்மிங்காமில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் 2-வது இடத்தை பிடித்த அவுஸ்திரேலியா- மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 14-ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

நன்றி-thinakaran



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *