உலகின் 3வது பெரிய வல்லரசாகும் இந்தியா.. ஜப்பானை முந்த போகிறது.. அசத்தல் கணிப்பு!


2030ல் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கை எச்எஸ்பிஐ வங்கி மூலம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பல பொருளாதார நிலைகளை வைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. எப்போதும் இந்த எச்எஸ்பிஐ கருத்து கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 எச்எஸ்பிஐ வங்கி வெளியிட்ட கருத்து கணிப்பில் இந்தியா உலக அளவில் 6வது பெரிய பணக்கார நாடாக மாறும் என்று கூறியது. அதேபோல் இந்தியா 2007ல் ஆறாவது பெரிய பணக்கார நாடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

முதல் இடம் யாருக்கு:

முதல் இடம் யாருக்கு 2030ல் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருக்கும். இப்போது சீனா ஜிடிபி அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நாடாக உள்ளது. 2030 அதன் ஜிடிபி மதிப்பு 26.7 டிரில்லியன் டாலராக இருக்கும். தற்போது அதன் ஜிடிபி மதிப்பு 14.2 டிரில்லியன் டாலராக உள்ளது.

இரண்டாம் இடம்:

தற்போது அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இதன் தற்போதைய ஜிடிபி மதிப்பு 20.2 டிரில்லியன் டாலராக உள்ளது. ஆனால் 2030 வரை இதன் வளர்ச்சி வேகம் குறைந்து சீனாவிற்கு அடுத்த இடத்திற்கு செல்லும். 2030ல் இதன் ஜிடிபி மதிப்பு 25.2 டிரில்லியன் டாலராக இருக்கும்.

இந்தியா மூன்றாவது இடம்:

இந்த நிலையில் இந்தியாவும் இதில் வேகவேகமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3.2 டிரில்லியன் டாலராக உள்ளது. 2030ல் இது வேகமாக மாறி ஜிடிபி மதிப்பு 5.9 டிரில்லியன் டாலராக இருக்கும். இதனால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடக மாறும். ஜப்பான் எப்படி இந்தியாவிடம் ஜப்பான் தனது இடத்தை பறிகொடுக்க உள்ளது.

ஏற்கனவே ஜப்பான் தனது 2ம் இடத்தை சீனாவிடம் பறிகொடுத்தது. இந்த நிலையில் 2030ல் ஜப்பானின் ஜிடிபி மதிப்பு 5.2 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி : Shyamsundar | tamil.oneindia.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *