மேலதிக பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட உடற்பாகங்கள்!


அகுணுகொலபெலெஸ்ஸ காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், கொஸ் மல்லியினுடைய முண்டம் அகுணுகொலபெலெஸ்ஸ நீதவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது.

கொழும்பு குற்றவியல் பிரிவினால் இந்த உடல் கொலை செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் கொஸ் மல்லியின் அடையாளம்  காணப்பட்டதுடன் சமீபத்தில் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தலையினுடைய முண்டம் என உறுதிப்படுத்தப்பட்டது.

மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *