இங்கே எல்லோருமே பாராட்டுக்காகத்தான் படம் பண்றோம்! – சிவகார்த்திகேயன் நேர்காணல்


ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், ஏதேனும் ஒரு பிரச்சினை வரும். அனைத்தையும் தாண்டி வெளியாகி வெற்றியை ருசித்து வருபவர் சிவகார்த்திகேயன். இம்முறை தமிழ் சினிமாவுக்கு பெரிதும் பரிச்சயப்படாத சூப்பர் ஹீரோ கதையை கையிலெடுத்துள்ளார். படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை அவருடைய பேச்சில் தெரிகிறது. ‘டாக்டர்’ படப்பிடிப்பில் இருந்து திரும்பிய சிவகார்த்திகேயனிடம் பேசியதில் இருந்து:

‘ஹீரோ’ உங்கள் வழக்கமான பாணியிலான படம் இல்லைதானே?

‘வேலைக்காரன்’ மாதிரியே இதுவும் சீரியஸான படம்தான். கொஞ்சம் காமெடி தூவியிருக்கும். ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். இங்கு சூப்பர் ஹீரோ படங்கள் குறைவு. இப்படத்தில் அந்த சூப்பர் ஹீரோவுக்கான தேவையை அனைவரும் உணரும் வகையில் கதைக்கான பின்னணி இருந்ததால் தைரியமாக நடித்துள்ளேன்.

இன்றைய கல்விச் சூழலை விமர்சனம் செய்யும் படமா அது?

சுயமா சிந்திக்கத் தெரிந்தவன்தான் ’சூப்பர் ஹீரோ’ என்பதுதான் படத்தின் ஐடியா. அதைச் சுற்றி கதை நகரும். கல்விச் சூழலை மட்டுமே விமர்சனம் செய்யும் பட மல்ல. நாம் கல்வியில் இருந்து என்ன எதிர் பார்க்க வேண்டும்? பெற்றோர் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று சிலவற்றை சொல்ல முயற்சி செய்து உள்ளோம்.

ரஜினி, விஜய்யை நீங்கள் இமிடேட் செய்கிறீர்கள் என்ற விமர்சனத்தைப் பற்றி..?

இப்படிப் பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு படிப்பினை. எனக்கு என்று ஒரு டெம்பிளேட் இருப்பதே வெற்றிதான். திரையுலகுக்கு வந்து 8 ஆண்டுகளே ஆகிறது. இப்போதும் என்னை நான் திரையில் புதிதாகக் காட்டி, மக்களிடையே வரவேற்பைப் பெற முயற்சிக்கிறேன். இன்னும் சில வருடங் களில் நானே என் டெம்பிளேட்டை உடைத்து, வேறொரு டெம்பிளேட்டுக்குள் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை.

இந்தக் கதையில் நடிக்கலாம் என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

இதுவரைக்கும் நடிக்காத களத்தில் கதை இருந்தாலும், அதில் நாம் நடித் தால் சரியாக இருக்குமா என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதில் என்ன புதிதாக சொல்லப்படுகிறது? இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதையும் யோசிப்பேன்.

இன்றைய பார்வையாளனின் ரசனை மிகவும் மாறிவிட்டது. மக்களுக்குப் அதிகம் பிடிக்கும் கமர்ஷியல் படங்களை சரியான விதத்தில் சொன்னால் பெரிதாக வெற்றியடையும். அதே போல புதிய ஒரு விஷயத்தை மக்கள் விரும்பும் வகையில் அழகாக, தெளிவாகச் சொன்னாலும் அந்தப் படம் வெற்றியடையும். 4 பாட்டு, 4 ஃபைட் இருந்தால் மட்டுமே அது கமர்ஷியல் படம் கிடையாது. அதிக பார்வையாளர்களை எந்தப் படம் சென்று அடைகிறதோ அதுதான் உண்மையில் கமர்ஷியல் படம்.

 

என்னுடைய தயாரிப்பில் நானே நடிக்க மாட்டேன் என்று முன்பு சொன்னீர்கள். இப்போது நீங்களே உங்கள் தயாரிப்பில் ‘டாக்டர்’ படத்தில் நடிக்கிறீர்களே..?

அதற்கான கட்டாயம் ஏற்பட்டதால் நடிக்கிறேன். நெல்சன் சாரை வைத்து படம் தயாரித்து அதில் நான் நடிக்கிறேன் என்பது எனக்கு நெகிழ்வான ஒரு விஷயமாகும். ஏனென்றால் அவர்தான் எனக்கு திரையுலகை அறிமுகம் செய்தவர். அவரிடம்தான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன்.

எனக்கும் அருண்ராஜா காமராஜாவுக்கும் சினிமா என்ற ஆசையை ரொம்ப பக்கத்தில் அழைத்து வந்து காட்டியவர். அவர் மீது எனக்கு தனிப்பட்ட வகையில் பெரிய மரியாதை இருப்பதால் அவர் இயக்கும் படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன்.

திரையுலகில் நடக்கும் போட்டியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதல் இடம், 2-வது இடம் என்ற போட்டியில் எல்லாம் எனக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால், வியாபாரம் தொடர்பாக நிச் சயம் யோசிப் பேன். விநியோகஸ் தர்கள் என் முந் தைய படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என மகிழ்ச் சியுடன் சொல்லும் போது, அதை தக்க வைத்துக் கொள்வது எப்படி என யோசிப்பேன். அந்த தக்கவைப்புதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு செலுத்தும் என்பதில் அதிக நம்பிக்கை உண்டு.

ரவிக்குமார் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன?

இன்னுமொரு 35 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு என சொல்லுங்கள் நான் சரியாக முடித்து கொடுக்கிறேன் எனச் சொல்லியிருக் கிறேன். அப்படத்தை நல்ல தரமாக தர வேண்டும் என முடிவு செய்துள்ளோம். அப்படிச் செய்தால் தான் அப்படம் புதிதாக இருக்கும்.

இடை யிடையே நடித்து முடித் திருக்க முடியும்தான். ஆனால், அது படத்தின் தரத் தைப் பாதிக்கும் என்பதால் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தவுள் ளோம். அந்தப் படத்தின் மீதான பிரச் சினைகள் எங்களோடு போகட்டும்.

மகள் ஆராதனா என்ன சொல்கிறார்?

படப்பிடிப்பு முடிந்தால் வீட்டில் ஆராதனா மேடத்துடன்தான் எனக்கு பொழுது போகிறது. இப்போது பாட்டு கற்றுக் கொண்டிருக்கிறார்.

 

நன்றி : கா.இசக்கி முத்து | இந்து தமிழ்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *