மழையிலும் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்!


 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் வீழ்த்தியது. முன்னதாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 10-வது ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக நாணய சுலடசியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி சார்பில் ராபின் உத்தப்பா கிறிஸ் லீன் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த உத்தப்பா புவனேஸ்வர் பந்து வீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா 18 ரன்களுடனும், , கிறிஸ்லீன் 31 ரன்களையும் எடுத்திருந்தனர். 7 வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை நைடர் ரைடர்ஸ் அணி குவிந்திருந்தது. இதன்போது மழை குறிக்கிடத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கிய நிலையில் 14 வது ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 97/5 ரன்களைக் குவித்திருந்தது. நிதிஷ் ராணா 18, ரன்களிலும் கிறிஸ் லீன் 49 ரன்களிலும், சுனில் நரேன், ஆன்ட்ரே ரஸ்ஸல் தலா 9 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். 3 ரன்களே சேர்த்த நிலையில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். தினேஷ்கார்த்திக் 29, சிவம் மவி 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே குவிந்திருந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3, ஸ்டேன்லேக், ஷிகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும், கெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஹைதராபாத் அணி சார்பில் ரித்திமான் சாஹா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அடித்து ஆடத் தொடங்கிய சாஹா 5 பவுண்டரியுடன் 24 ரன்களில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 7 ரன்களுக்கு போல்டானார்.
பின்னர் கேப்டன் கேன் வில்லியம்ஸன், மணிஷ் பாண்டே இணை ஆடியது. 8.4 ஓவரின் போது 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மணிஷ். அப்போது ஹைதராபாத் அணி 55/3 ரன்களை எடுத்திருந்தது. ஷாகிப் அல் ஹசன் 27 ரன்களுக்கு போல்டானார்.

அணியின் வெற்றிக்காக பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்ஸன் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய தீபக் ஹூடா 5, யூசுப் பதான் 17 ரன்களுடன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

19வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை பெற்றிருந்தது. கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும், மிச்செல் ஜான்சன், சாவ்லா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹைதராபாத் அணி தொடர்ந்து தனது 3வது வெற்றியை பெற்றுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *