இரணைமடு குளம் விவசாயிகளிடம் கையளிப்பு


கிளிநொச்சி இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வான் கதவை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இரணைமடு குளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று முற்பகல் இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் கையளித்தார். இதனையடுத்து 14 வான்கதவுகளில் ஒரு வான்கதவை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரணைமடு குளம் வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியை எட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *